கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன. திரைப்பட தயாரிப்பாளர்களும் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். கொரோனா பரவல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.
மக்களிடம் தற்போதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஓடிடி தளங்கள் தங்களது சந்தாக்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தனது சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
அதன்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிடவற்றை மொபைல், டேபுளட், டிவி அல்லது லேப்டாப்பில் பார்ப்பதற்கான அடிப்படை சந்தா விலை மாதத்திற்கு முன்பு 499 ரூபாயாக இருந்தது. அந்த சந்தாவின் விலை தற்போது 199 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல நிகழ்ச்சிகளை ஹெச்.டி குவாலிட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு திரையில் பார்ப்பதற்கான மாத சந்தா விலை முன்பு 649 ரூபாயாக இருந்தது. அதன் விலை தற்போது 499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அல்ட்ரா ஹெச்.டி குவாலிட்டியில், ஒரே நேரத்தில் நான்கு திரைகளில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான மாத சந்தா 799 ரூபாயிலிருந்து 649 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளை பிரேத்யேகமாக மொபைலில் மட்டும் பார்ப்பதற்கு கொண்டுவரப்பட்ட 199 ரூபாய் மாத சந்தா தற்போது 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணம் பயனாளர்கள் அடுத்து செய்யும் ரீச்சார்ஜ் லிருந்து நடைமுறைக்கு வரும். முன்னதாக பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் தனது சந்தாக்களின் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்