என்னதான் நாளுக்கு நாள் புதிய புதிய தொழில்நுட்பம் கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல்கள் சந்தைப்படுத்தப்பட்டாலும் ஐபோனுக்கான மவுசு இன்றும் குறையவில்லை. பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் ஐபோன். சூப்பர் தொழில் நுட்பங்கள், பாதுகாப்பு, கேமரா குவாலிட்டி, டிஸ்பிளே குவாலிட்டி என ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களை காட்டிலும் அனைத்திலும் ஒரு ஸ்டெப் மேல்தான் இருக்கும். விலையும் அப்படித்தான்.
ஆப்பிள் நிறுவனம் iPhone 12, iPhone 12 ப்ரோ, iPhone 13Mac, Airpods தொடர்த்து பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும், உயர் தர தொழில்நுட்பட சாதனங்கள் என்று பெயர் பெற்றது என்பதால் இதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. உலகளவில் ஐபோனுக்கு ஒரு டிமாண்ட் எப்போதுமே உண்டு. எவ்வளவு விலை உயர்வு என்றாலும் அடுத்த மாடல் எப்போது என ஏங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்காகவே அடுத்தடுத்த மாடலையும் ஐபோன் வெளியிட்டு வருகிறது. உலகளவில் சிப் தட்டுப்பாடு ஏற்பட்டு செல்போன் நிறுவனங்கள் திண்டாடிய நேரம் ஆப்பிள் நிறுவனமும் சற்று தடுமாறியது. ஆனால் நிலைமையை சீராக வைத்துக்கொண்ட அந்நிறுவனம் தற்போது உள்ளூர் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
`இனி டெலிகிராம் செயலியில் திரைப்பட ஸ்பாய்லர்களை அனுப்ப முடியாது!’ - விவரங்கள் என்ன?
நம்ம ஊர் சென்னையில்...
சென்னையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் iPhone 13உற்பத்தியை மிக விரைவில் தொடங்கவுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதற்கான சோதனை ஓட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. லேட்டஸ்ட் மாடலான ஐபோன்13 தான் சென்னையில் உருவாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் இருந்து ஐபோன் 13 ஏற்றுமதி ஆகும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளது அந்நிறுவனம். இந்தியாவிலேயே அடுத்த மாடல் உற்பத்தி என்பதால் ஐபோன் விலை இந்தியாவில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இதற்கிடையே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்