கஜகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏராளமான தமிழக வீரர்கள், வீராங்கனைகள் உள்பட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.


 






இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் போல்ட்வால்ட் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரோசி மீனா 3.90 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும், பவித்ரா வெங்கடேஷ் 4 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் குண்டு எறிதலில் தேஜிந்தர்சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். கரண்வீர்சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்கள் ட்ரிபிள்ஜம்ப் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.


அதேபோல, பெண்களுக்கான பெண்டத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் தேசிய அளவில் 4119 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.






ஆசிய தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.93 மீட்டர் தாண்டி ஆல்ட்ரின்ஜெஸ்வின் தேசிய சாதனை படைத்துள்ளார். இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜ் தடை தாண்டும் ஓட்டம் போட்டியில் 8.16 நொடிகளில் 60 மீட்டரை தாண்டி தேசியளவில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 81.7 நொடிகளில் 60 மீட்டரை கடந்ததே சாதனையாக இருந்தது.  


மேலும் படிக்க: Ind vs Aus 1st test: அஸ்வின், ஜடேஜா சுழலில் சுழன்ற ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அசத்தல் வெற்றி...!


மேலும் படிக்க: IND-W vs PAK-W : மகளிர் டி20 உலகக்கோப்பை: மந்தனா இல்லாமல் களம் இறங்கும் இந்தியா! பாகிஸ்தானை வெல்லுமா?