ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, அங்கிருந்த குழந்தைகளுக்காக ரசிர்கர்கள் பொம்மைகளை பரிசாக அளித்துள்ளது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் கவத்தை ஈர்த்துள்ளது. 


ஸ்பெயினில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கால்பந்து ரசிகர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக அளிப்பது வழக்கம். அங்குள்ள குழந்தைகளில் விளையாட்டுப் பொருட்கள் அவ்வளவாக இல்லாதவர்களுக்கு, அவர்களின் புத்தாண்டை சிறப்பானதாக மாற்றுவதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ரசிகர்கள் பொம்மைகளை பரிசளிக்கின்றனர். 






Seville -யில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பொம்மைகளுடன் பங்கேற்றனர். அப்போது போட்டியின் பாதி நேரத்தில் பிரேக் விடப்படும். அப்போது, போட்டி நடுவர் விசில் ஊதினார். அப்போது, அங்கிருந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டுவந்த பொம்மைகளை  தூக்கி வீசினர். இது குழந்தைகளுக்குச் சென்று சேரும் அல்லது அங்கிருக்கும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாரு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பொம்மைகள் அனைத்தையும் சேமித்துவைத்து குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பொம்மைகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்குவர்.


குழந்தைகளுக்காக 14 ஆயிரம் பொம்மைகளை மைதனத்தில் தூக்கி எறிந்தனர். இது பொம்மைகள் ஏதும் இல்லாத குழந்தைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்நிகழ்வை லா லிகா க்ளப் ரியல் பீட்டிஸ் ( La Liga club Real Betis) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மேலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக அளவில் குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பரிசளிக்க ரியல் பீட்டிஸ் அமைப்பு (The Real Betis Foundation) முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கால்பந்து ரசிகர்களால் நடத்தப்படும் அமைப்பாகும். குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளிப்பதற்கு முன்னாள் கால்பந்து வீரர் பெஞ்ஜமின் சரோடனா (Benjamín Zarandona)- வும் நிதி உதவி அளித்துள்ளார். 


பாண்டா, ஆக்டோபஸ், போக்கிமான் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகளை தூக்கி எறிந்தனர். இதை மைதான ஊழியர்களும், தொண்டு நிறுவன உறுப்பினர்களும் எடுத்துக்கொண்டனர்.


ரியல் பீட்டீஸ் க்ளப் மூலம் பொம்மைகளுக்கு பரிசளிப்பதை எப்போதும் தொடர்வோம் என்று ரசிகர்கள் உறுதியேற்று கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளனர். 




மேலும் வாசிக்க..


New Year 2023: "2023 ஆம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்” : வாழ்த்துக்களை குவித்த அரசியல் தலைவர்கள்..


TN Ration Shop: ரேஷன் கடைகளில் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது.. தமிழகத்தில் இன்று முதல் அமல்..!