'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பெரிதும் பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரையிலும் அவ்வபோது நடித்து வந்தார். இவர் செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்;
நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்கத்தில் வெளியாகியுள்ளது.ஓ மை கோஸ்ட் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை சன்னி லியோன் புடவையில் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா, மாடர்னான காக்ரா ஜோலி உடையில் வந்திருந்தார். இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், “மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் தமிழ் கலாச்சாரப்படி பட்டுப்புடவையில் வந்திருக்கிறார்; ஆனால் கோவை பெண் தர்ஷா குப்தா அவங்களும் ஒரு ட்ரெஸ் உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார் என நக்கலாக பேசினார்.
சதீஷின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த தர்ஷா குப்தா ட்விட்டரில் சீறத்தொடங்கினார். இது குறித்து அப்போது ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்த தர்ஷா குப்தா, “நான் மேடையில் உங்களை இந்த விஷயத்தையா கூற சொன்னேன்? யாராவது, என்னப்பத்தி மேடையில அசிங்கமா பேசுங்க-னு சொல்லுவாங்களா? அன்னைக்கு எனக்கும் அவ்ளோ கஷ்டமா இருந்தது,இருந்தாலும் நான் அதை பெருசா காட்டிக்கல. பட், நீங்க இப்டி பேசுவது நல்லதல்ல” என குறிப்பிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த ட்வீட்டை டெலீட்டும் செய்து விட்டார்.
இந்த விவகாரம் நடந்த பல நாட்கள் கடந்த நிலையில், இவர்கள் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. தற்போது, இவர்கள் இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தங்களது நட்பு குறித்து பேசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில், பேசிய நடிகை தர்ஷா குப்தாவிடம் செய்தியாளர்கள் பலர் தங்களது கேள்விகளை முன் வைத்தனர்.இதில் ஒருவர் தர்ஷா குப்தா அதிகமாக கோபப்படுகிறார் என கூறப்படுகிறது என கேள்வி வடிவில் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் ,"அப்படி யாரும் என்னிடம் கூறுவதில்லை ,நீங்கள்தான் அவ்வாறு கூறுகிறீர்கள்,என்னை வெளியுலகில் குழந்தை என்றுதான் கூறுவார்கள்." என கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சியில் அந்த செய்தியாளரை சந்தித்து பேசினார். திடீரென்று இருவருக்கும் வாக்குவாத வடிவில் உரையாடல் நகர்ந்தது. இதனால் தர்ஷா குப்தா கண் கலங்கினார்.அந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.