இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எப்படி அணுகியிருக்க வேண்டும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, செல்ஃப் கண்ட்ரோலுடன் ‘சரி நன்றி’ என இந்திய கேப்டன் கோலி பதிலளித்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


கேப்டன்கள் ஒரு போட்டி முடிந்த உடனேயே செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும்போது, கேமராவுக்கு முன்னால் சில நேரங்களில் தங்கள் அமைதியை இழக்க நேரிடும். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோற்ற விதத்தில், அணி தோற்றபோது, ​​வீரர்கள் போட்டியை அணுகிய விதம் குறித்து கேள்விகள் கேட்கப்படும் போது விராட் கோலி டென்ஷன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலியிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எப்படி அணுகியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.


ஒரு நிருபர், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முழுக்க முழுக்க பேட்களில் பந்துவீசுவதாகவும், பேக்ஃபூட்டில் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தபோது, ​​இந்திய வீரர்களை நிறைய ரன்களை எடுப்பதைத் தவறவிட்டதாகவும் கூறினார். இந்த கேள்விக்கு அமைதியாக இருந்த கோலி, 'சரி நன்றி' என்று பதிலளித்தார்.


கோலியின் இந்த பேட்டி குறித்து அமித் வர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கோலியின் குறிப்பிடக்கூடிய சுய கட்டுப்பாடு இது.ஒரு வகையில், இது ஒரு உன்னதமான ட்விட்டர் தருணம். பூஜ்ஜிய அறிவு மற்றும் பூஜ்ஜிய சுய விழிப்புணர்வு கொண்ட நபர் உண்மையான பயிற்சியாளருக்கு சீரற்ற ஞானத்தை கொடுக்க முயற்சிக்கிறார்’ எனப் பதிவிட்டுள்ளார்.


 






இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே இங்கிலாந்தில் பட்டோடி தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் கடந்த 25-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, இங்கிலாந்து அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத தோல்வியை இந்திய அணிக்கு அளித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாக தகுதிபெற்ற இந்திய அணி, இந்த 2021ம் ஆண்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவுவது இதுவே முதன்முறை ஆகும்.


சர்ச்சை..! சஸ்பெண்ட்...! சாதனை..! - இந்தியாவை வீழ்த்திய ராபின்சனின் கம்பேக் கதை


IND vs ENG : லீட்சில் 54 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற இங்கிலாந்து : இந்தியா இன்னிங்ஸ் தோல்வி