டென்னிஸ் உலகின் கவுரவமிக்க தொடர்களில் ஒன்றாக விம்பிள்டன் தொடர் திகழ்கிறது. உலகப்புகழ்பெற்ற விம்பிள்டன் தொடர் லண்டன் மாநகரில் உள்ள விம்பிள்டன் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த தொடரில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள் பங்கேற்பது வழக்கம். தற்போது, இந்த தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும், டென்னிஸ் உலகின் ஜாம்பவானுமாகிய ரோஜர் பெடரர் வந்துள்ளார். அவர் வந்துள்ளதை விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், தனது அதிகாரப்பூர்வ  பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.




விம்பிள்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் ரோஜர் பெடரை பகிர்ந்து “வாத்தி கம்மிங்” என்று பதிவிட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்தியா முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், வாத்தி கம்மிங் வரிகள்  பதிவிட்டு விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வந்துள்ளதை இந்தியர்களும், தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் படிக்க : Virat Kohli: இங்கிலாந்து டெஸ்டில் எளிய கேட்சை கோட்டை விட்ட கோலி.. ட்விட்டரில் கடுப்பாகும் ரசிகர்கள்


குறிப்பாக, இந்த பதிவுக்கு கீழ் தமிழினின் பெருமையை புகழ்ந்து தமிழர்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்தியர்தான் விம்பிள்டனின் அட்மின் என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் பலரும் வாத்தி கம்மிங்கிற்கு இணையத்தில் அர்த்தம் தேடி வருகின்றனர்.




கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அனிருத் இசையில் உருவாகிய வாத்தி கம்மிங் பாடல் யூ டியூப்பில் மட்டும் இதுவரை 372 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Kohli Viral Video: "வாயை மூடிகிட்டு பேட் பண்ணு.." சீண்டிய பார்ஸ்டோவிடம் சீறிய விராட்கோலி..!


மேலும் படிக்க : IND vs ENG 5th Test : அதே வேகம்.. அதே சோகம்.. யுவராஜூக்கு பதில் பும்ரா... சொந்த ஊரில் நொந்து போன பிராட்!



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண