இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும் அண்மையில் நடந்த இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கேட்டார், அதற்கு பதிலளித்த அமலா பால், “ உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அதை நான் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. நான் தற்போது சுய தேடுதல் பயணத்தில் இருக்கிறேன். அதை கண்டுபிடித்த உடன் உங்களுக்கு நிச்சயமாக சொல்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அடுத்ததாக இவர நடித்த மைனா திரைப்படம்தான் இவரை பிரபலமடைய செய்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அமலாபால் விஜயுடன் 'தலைவா'படத்தில் இணைந்தார்.
இதனையடுத்து எ.எல்.விஜயை திருமணம் செய்துக்கொண்ட அமலா பால் , சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் ஆடை, திருட்டுபயலே 2, குட்டிஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.