இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் தன்னை சீண்டிய பார்ஸ்டோவை விராட்கோலி வாயை மூடு என்று சொல்லிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 31.1 ஓவரின்போது இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் ஆடி வந்தது. அப்போது, களத்தில் பார்ஸ்டோ மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆடினர்.
அப்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த பார்ஸ்டோ விராட்கோலியிடம் ஏதோ ஆவேசமாக வார்த்தைகளை கூறினார். இதனால், கோபமடைந்த விராட்கோலி வேகமாக பார்ஸ்டோவை நோக்கிச் சென்றார். அப்போது, பார்ஸ்டோ விராட்கோலியின் தோளில் தட்டி பீல்டிங் செய்யுங்கள் என்பது போல சைகை காட்டினார். அதற்கு பதிலடி தரும் விதமாக விராட்கோலி முதலில் நீ சென்று பேட்டிங் செய் என்றார். பின்னர், பீல்டிங் பகுதிக்கு சென்ற விராட்கோலி பார்ஸ்டோவை பார்த்து வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய் என்றார்.
பின்னர், நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர், இதனால், களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் விராட்கோலிக்கு ஆதரவாக கரகோஷத்தை எழுப்பினர். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் விராட்கோலியை யாரும் சீண்டாதவரை அமைதியாகவே இருப்பார். ஆனால், தேவையில்லாமல் அவரை சீண்டினால் தக்க பதிலடி தருவதற்கு கோலி தவறுவதில்லை என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், ஜானி பார்ஸ்டோ மட்டும் தனி ஆளாக போராடி அணியை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் தடுமாறினாலும் தற்போதுவரை அவர் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவரை அவுட்டாக்க இந்திய வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இங்கிலாந்து தற்போது வரை 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களுடன் களத்தில் உள்ளது.
மேலும் படிக்க : Virat Kohli: இங்கிலாந்து டெஸ்டில் எளிய கேட்சை கோட்டை விட்ட கோலி.. ட்விட்டரில் கடுப்பாகும் ரசிகர்கள்
மேலும் படிக்க : நிர்வாகம் எடுத்த விபரீத முடிவு: மயக்கமடைந்த கிரிக்கெட் வீரர்கள் - வெஸ்ட் இண்டீஸில் நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்