இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசினார். அத்துடன் கேப்டன் பும்ரா பேட்டிங்கில் பிராட் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதன்காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறியது. 


இங்கிலாந்து அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது. அப்போது இங்கிலாந்து அணியில் நைட்வாட்ச்மேனாக ஜாக் லீச் களமிறங்கினார். முகமது ஷமி பந்துவீச்சில் ஜாக் லீச் ஸ்லிப் திசையில் ஒரு எளிதான கேட்சை கொடுத்தார். அந்த கேட்சை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தவறவிட்டார். மிகவும் எளிதான வாய்ப்பை விராட் கோலி தவறவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


 






இந்த கேட்சை விராட் கோலி தவறவிட்டது தொடர்பாக  ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் பேட்டிங்கில் சரியாக செயல்படாதது விராட் கோலியின் ஃபில்டிங்கிலும் தெரிகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 






 






 






 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண