பும்ரா சாதனை..
இந்தியாவுக்கு எதிராக என்பதை விட, ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக மோசமான சாதனையினை தொடர்ந்து நிகழ்த்தி இருக்கிறார் இங்கிலாந்து கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் யாருமே எதிர்பார்க்காத உலக சாதனை அரங்கேறியுள்ளது. அதனை நிகழ்த்தியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் பும்ரா. அந்த சாதனையால் சோதனையில் சிக்கியவர்தான் ஸ்டூவர்ட் பிராட்.
அவரின் ஓவரில்தான் நாலாபுறமும் பந்துகளை பும்ரா பறக்கவிட்டுள்ளார். ஒரே ஓவரில், 2 சிக்சர், 4 பவுண்ட்ரி மற்றும் எக்ஸ்ட்ரா உட்பட 35 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் அது அனல் பறக்கும் போட்டியாக இருக்கும். அதேபோல் இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என்றால் அது பனிப்போர் என்றே சொல்ல வேண்டும், மறைமுகமாக நடக்கும் பனிப்போர் யாருக்கும் தெரிவதில்லை. இன்று பும்ரா பறக்கவிட்ட ஸ்டூவர்ட் பிராட்டை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இவர் ஏற்கெனவே யுவராஜ் சிங்கிடம் மரண அடி வாங்கியவர்.
6 சிக்ஸர்கள்..
இதற்கு முன்னர், 2007 டி-20 உலககோப்பையில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எந்திரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராட் ஓவரினை பிரித்து மேய்ந்தார். இதில் ஆறு பந்துகளிலும் ஆறு சிஸ்சர் அடித்து உலக சாதனை படைத்தார். இது ஸ்டூவட்ர் பிராடின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தூக்கத்தினை தொலைத்த நாளாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ஸ்டூவர்ட் பிராடே எதிர் பார்த்து இருக்க மாட்டார், மீண்டும் இப்படி தான் நோகடிக்கப்படுவேன் என்று. இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர், 4 பவுண்ட்ரி மர்றும் எக்ஸ்ட்ரா உட்பட 35 ரன்கள் எடுத்து, உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த மோசமான தனது பர்ஃபாமன்ஸ்சுக்குப் பிறகு, ”பரமா, சாவு பயத்த காட்டீடானுங்க பரமா” என்பது தான் ஸ்டூவர்ட் பிராட்டின் மைண்ட் வாய்சாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்