புரோ கபடி லீக்:



10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 


அதன்படி, நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. இதனிடையே அந்த அணி இனி வரும் போட்டிகளில்  சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


முன்னதாக, இந்த லீக்கில் தமிழ்  தலைவாஸ் அணி இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 13 புள்ளிகளுடன் அந்த அணி 11 வது இடத்தில் இருக்கிறது.


வெற்றி முனைப்பில் தமிழ் தலைவாஸ்:


இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் வெற்றி முனைப்புடன் புனேரி பல்டன் அணியை ஜனவரி 7 ஆம் தேதி எதிர்கொள்ள காத்திருக்கிறது தமிழ் தலைவாஸ். அதேநேரம் புனேரி பல்டன் அணி வலுவாக உள்ளது. இந்த லீக் போட்டிகளில் இதுவரை மொத்தம் 7 போட்டிகளை விளையாடி உள்ள அந்த அணி 1 தோல்வியை பெற்று 6 வெற்றிகளுடன் 31 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 


இதனால் ஜனவரி 7 ஆம் தேதி புனேரி பல்டன் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அனல் பறக்கும். முன்னதாக, எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் தலைவாஸ் அணி களம் இறங்கும். அதேபோல், புனேரி பல்டன் அணியை வீழ்த்தி தங்களது வெற்றிபயணத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.


 


மேலும்  படிக்க: IND vs SA 2nd Test: பழிக்குப் பழி! புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!


 


மேலும் படிக்க: ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்! விவரம் உள்ளே!