தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்பி பாட்டி வைத்த போட்டியில் தீபா ஜெயித்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, செல்பி பாட்டி மீனாட்சியுடன் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது என்ன மீனாட்சி புருஷன் ஊர்ல இருந்து வந்திருக்கான், விஷேஷம் ஏதும் இல்லையா என்று கேட்க மீனாட்சி இப்போ தானே வந்து இருக்காரு இதுக்கு அப்புறம் தான் பேசணும் இன்றி சொல்கிறாள். கார்த்திக், தீபாவுக்கு எதுவும் விஷேஷம் இல்லையா என்று கேட்க கார்த்திக் மற்றும் தீபா இருவரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.


இந்த நேரத்தில் தீபா திடீரென ஓடி போய் வாந்தி எடுக்க செல்பி பாட்டி உண்மையாகவே தீபாவுக்கு விஷேஷம் தான் போல என்று கேட்க மீனாட்சி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, இன்னும் அவர்களுக்குள் நடக்க வேண்டியது எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறாள். உடனே செல்பி பாட்டி அதான் ஸிண்டாக் இருக்கே, அதை பாலில் கலந்து கொடுத்து விட்டால் நடக்க வேண்டியது எல்லாம் தானா நடக்கும் என்று சொல்கிறார்.


அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலில் வயகரா மாத்திரையை கலந்து கார்த்திக்கு கலந்து கொடுக்க வைக்கின்றனர். பிறகு மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து மாத்திரை கலந்து பாலை கொடுத்த விஷயத்தை சொல்லி கொண்டிருக்க கார்த்திக் ரூமுக்குள் நுழைய போனை வைத்து விடுகிறாள். கார்த்திக் தீபாவை இடிப்பது, ரொமான்டிக்காக பார்ப்பது என சேட்டையை தொடங்க தீபா பீரோ அருகே சென்று நின்று விடுகிறாள்.


கார்த்திக் அவளை நெருங்கி வர தீபா கண்ணை மூடி கொள்ள அவன் பீரோவில் இருந்து போர்வையை எடுத்து கொண்டு போய் இழுத்து போத்தி கொண்டு படுத்து தூங்கி விட தீபா ஏமாற்றம் அடைகிறாள். அதன் பிறகு மறுநாள் காலையில் மீனாட்சி என்ன தீபா நைட் எல்லாம் ஓகே தானே என்று கேட்க அவள் நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் எப்படி இது சாத்தியம் என ஷாக் ஆகின்றனர்.


அதன் பிறகு கௌஷிக்கை கூப்பிட்டு பாலை கொடுத்தியா? கார்த்திக் குடிச்சானா என்று கேட்க கார்த்திக் அதை குடிக்கவே இல்லை என்ற உண்மையை உடைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.