நாள்: 05.01.2024 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


மாலை 12.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளுக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.


ரிஷபம்


சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தம்பதியர்களுக்குள் புரிதல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.


மிதுனம்


கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நாத்திகம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.


கடகம்


மனதளவில் உற்சாகம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாயப் பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். புகழ் நிறைந்த நாள்.


சிம்மம்


புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.


கன்னி


திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தனவரவுகளின் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் செல்லவும். போட்டி நிறைந்த நாள்.


துலாம்


கலை பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படவும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தொழில் நுட்ப தேடல் உண்டாகும். கனிவான பேச்சுக்களின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.


விருச்சிகம்:


செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உபரி வருமானம் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். சலனம் நிறைந்த நாள்.


தனுசு


தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.


மகரம்


பொதுக்காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மறதி குறையும் நாள்.


கும்பம்


சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனை மனதளவில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். மகான்களின் தரிசனத்தால்  மகிழ்ச்சி அடைவீர்கள். சுற்று வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.


மீனம்


திடீர் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.