டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.


இந்த போட்டியில், முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, சிறப்பாக விளையாடி இருக்கும் நீரஜ் சோப்ரா, இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 






ஒலிம்பிக் தொடரில், இந்திய வீரர் ஒருவர் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. முன்னதாக, 2016-ம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் ரெக்கார்டு படைத்தார். அதனை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார். 


Eng Vs India | இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: ட்ரெண்ட் ப்ரிட்ஜ் ஆடுகளத்தின் பின்னணி என்ன?


ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.50 மீட்டர் தூரம் இருந்தால் போதுமானது, ஆனால், முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. இன்று நடைபெற்ற க்ரூப் ஏ தகுதிச்சுற்றுப் போட்டியில், நீர்ஜ் சோப்ரா முதல் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரரான சிவபால் சிங், க்ரூப் பி தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளார். அவரும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாதனையை படைக்க கூடும். இறுதிப்போட்டி, வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. 


தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடர் வட்டு எறிதல் விளையாட்டின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் முன்னேறி இருந்தார். அதில் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 61.62 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் கவுர் ஃபவுல் செய்தார். மூன்றாவது வாய்ப்பில் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் வீசி 6ஆவது இடத்திற்கு முன்னேறினார். முதல் மூன்று வாய்ப்புகளுக்கு பிறகு கடைசி 4 இடத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் மீதம் இருந்த 8 வீராங்கனைகள் நான்காவது வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்தியா வீராங்கனை கவுர் ஃபவுல் செய்தார். ஐந்தாம் வாய்ப்பில் அவர் 61.37 மீட்டர் தூரம் வீசினார். இறுதியில் ஆறாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். இதனால் 6ஆவது இடம் பிடித்தார்.


Tokyo Olympic 2020: மகளிர் ஹாக்கி அணி, நீரஜ் சோப்ரா,அன்ஷூ மாலிக்.. நாளைக்கு களம்காணும் ஒலிம்பிக் லிஸ்ட்!