டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 11ஆவது நாளான இன்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-2 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. தடகளத்தில் மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனு ராணி பங்கேற்றார். அவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதேபோல் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார். மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். இன்றைய நாள் அனைத்தும் இந்தியாவிற்கு தோல்விகளே அமைந்தன.


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்?


தடகளம்: ஈட்டி எறிதல்: குரூப் ஏ தகுதிச்சுற்று- நீரஜ் சோப்ரா(காலை 5.45 மணி)


                                                               குரூப் பி தகுதிச் சுற்று-சிவ்பால் சிங் (காலை 7.05 மணி)


மல்யுத்தம்: ஆடவர் 57 கிலோ: ரவிக்குமார் தாஹியா vs ஆஸ்கார் எட்வார்டோ(கோலம்பியா)(காலை 8 மணிக்கு மேல் )


                                ஆடவர் 86கிலோ: தீபக் புனியா vs  அகியமோர்(நைஜிரியா)( காலை 8 மணிக்கு மேல் )


                            மகளிர் 57 கிலோ: அன்ஷூ மாலிக் vs இர்யனா(பெலாரஷ்யா)(காலை 8 மணிக்கு மேல் )


                          


குத்துச்சண்டை: மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டி: லோவ்லினா பார்கோயின் vs சுர்மெனலி பூசனாஸ் (துருக்கி)(காலை 11.00 மணி)


ஹாக்கி: மகளிர்அரையிறுதிப் போட்டி: இந்தியா vs அர்ஜென்டினா (மாலை 3.30 மணி)


 






நாளை இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி மிகவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை தரும் என்று எதிர்பார்க்கப்படும் மல்யுத்த விளையாட்டில் இரண்டு பேர் களமிறங்க உள்ளனர். ரவிக்குமார் தாஹியா மற்றும் அன்ஷூ மாலிக் ஆகிய இருவரும் நாளை தங்களது பிரிவில் முதல் சுற்றில் களமிறங்க உள்ளனர். அதேபோல் தடகளத்தில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு நட்சத்திரம் என்று கருதப்படும் நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றில் நாளை பங்கேற்கிறார். அவர் தகுதிச் சுற்றில் சிறப்பாக ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக் பதக்கத்துடன் கொடுக்கப்படும் பூச்செண்டு : உருக்கமான பின்னணி தெரியுமா?