டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஐந்தாவது நாளான இன்று, இந்தியாவுக்கு இரண்டு விளையாட்டுகளில் வெற்றியும், மீதம் கலந்து கொண்ட விளையாட்டுகளில் தோல்வியும் கிடைத்தது. இந்நிலையில், நாளை இந்தியா பங்கு பெற உள்ள போட்டிகள் குறித்த முழு விவரம் இங்கே. பி.வி சிந்து, தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்க இருக்கும் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
காலை 6.30 மணி - மகளிர் ஹாக்கி போட்டி - இந்தியா vs பிரிட்டன்
காலை 7.30 மணி - பேட்மிண்டன் - இந்தியா vs ஹாங்காங் - பி.வி சிந்து vs கான் யி சியூங்
காலை 7.31 மணி - வில்வித்தை - ஆண்களுக்கான தனிநபர் போட்டி - தருண்தீப் ராய் vs உக்ரேன் வீரர் ஒலிக்ஷி
காலை 8 மணி - படகுப்போட்டி - அர்ஜுன் லால் ஜட் & அர்விந்த் சிங்
காலை 8.35 மணி - பாய்மரப்படகுப் போட்டி - கணபதி & வருண் தக்கர்
மதியம் 12.30 மணி - வில்வித்தை -பிரவீன் ஜாதவ் vs ரஷ்யாவின் கல்சன்
Tokyo Covid 19: ஒலிம்பிக்கை விட்டுவைக்காத கொரோனா... தொடர் நிறுத்தப்படுமா?
மதியம் 2.14 மணி - வில்வித்தை - தீபிகா குமாரி vs பூட்டானின் கர்மா
மதியம் 2.30 மணி - பேட்மிண்டன் - சாய் பிரணீத் vs நெதர்லாந்தின் மார்க்
மதியம் 2.33 மணி - மல்யுத்தம் - பூஜா ராணி vs அல்ஜீரியாவின் இச்ராஜ் சயிப்
நாளை இந்தியா பங்கேற்கும் போட்டிகளில், பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பேட்மிண்டன் போட்டியை தவிர்த்து, மகளிருக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி நாளை விளையாட உள்ளார். ஏற்கெனவே, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா வெளியேறியுள்ளதால், இந்த போட்டியில் வென்று அவர் தனது ஒலிம்பிக் பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 39-வது இடத்தில் உள்ளது. 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
Ind vs SL, 2021: க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த அந்த 8 பேர்... கொரோனா பீதியில் இந்திய அணி