2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். 


Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் : முதல் முறையாக இந்திய நடுவர் தேர்வு !


டென்னிஸ் விளையாட்டை பொருத்தவரை, இந்தியா சார்பில் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா என இரண்டு வீராங்கனைகள் மற்றும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதன் மூலம், இந்திய வீராங்கனை ஒருவர் நான்கு முறை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறை. சானியா மிர்சா இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்க இருந்த ஒரு வீரர் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த சுமித் நகல் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.






அனைத்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 23 வயதேயான சுமித் நகல், ஏடிபி தரவரிசையில் தற்போது 154 வது இடத்தில் உள்ளார். ஒலிம்பிக் தேர்ச்சி போட்டிகளில் சிறப்பாக செயல்படாத அவருக்கு, கடைசி நிமிட வாய்ப்பாக ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


#VaadiVaasalTitleLook: காளை முத்திரை... கொம்புகள்... குறியீடுகள் குவிய வெளியானது வாடிவாசல் டைட்டில் லுக்!


இதன் மூலம், இந்திய அணி வீரர் ரோஹம் போபன்னாவுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், வரும் ஜூலை 17-ம் தேதி ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல இருக்கின்றனர். அதை முன்னிட்டு, பிரதமர் மோடி கானொளி காட்சி வாயிலாக இந்திய அணியைச் சந்தித்து உரையாடினார்.






அப்போது பேசிய பிரதமர் மோடி, ”எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்களின் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்துங்கள்” என ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கினார். 


Tokyo Olympic | 7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?