பாரீஸ் ஒலிம்பிக் 2024:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர். இதில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முக்கியமாக இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ள நீரஜ் சோப்ரா இந்த முறை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. 


தங்கமகன் நீரஜ் சோப்ரா:


இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர். இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமனாவர். அதாவது ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில்  87.58 மீ தூரம்  ஈட்டி எறிந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர். அதோடு தடகளத்தில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா.


ஒட்டுமொத்தமாக, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, மிகப்பெரிய கட்டத்தில் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.


அதனைத்தொடர்ந்து உலக மற்றும் டயமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தையும் தன் வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இவர் அதில் தங்கம் வென்றார். இப்படி தான் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறார். இச்சூழலில் தான் ஜூலை 26 ஆம் தேதை தொடங்க உள்ள பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார்.


இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.  மேலும் இந்தியாவிற்கு எப்படியும் ஒரு தங்க பதக்கத்தை வென்று கொடுப்பார் நீரஜ் சோப்ரா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!


மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன்!