பாரீஸ் ஒலிம்பிக் 2024:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக் தொடர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் வில்வித்தை, தடகளம், பளுதூக்குல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஃபீல்டு ஹாக்கி, ஜூடோ, ரோயிங், நீச்சல், மராத்தான், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கோல்ஃப், குதிரையேற்றம் என்று மொத்தமாக 16 விளையாட்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
முக்கியமாக நீரஜ் சோப்ரா, பி.வி சிந்து, மீராபாய் சானு, தீரஜ் பொம்மதேவராஜ், தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ், அங்கிதா பகத், தீபிகா குமாரி, ஜோதி யாராஜி, கிரண் பஹல், பருல் சவுத்ரி என்று மொத்தமாக 117 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் மீராபாய் சானு.
இவர் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பிரபலமானார். அதன் பின்னர் இடுப்பு மற்றும் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பல்வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். காயம் காரணமாக 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து பாதியிலேயே விலகினார்.
தங்கம் வெல்ல காத்திருக்கும் மீராபாய் சானு:
இச்சூழலில் தான் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார். இதில் பெண்களுக்கான 49 கிலோ, 59 கிலோ, 71 கிலோ, 81 கிலோ மற்றும் 81 கிலோவிற்கும் அதிகமான பிரிவுகளில் மீராபாய் சானு போட்டியிடுகிறார். இச்சூழலில் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்வது குறித்து மீராபாய் சானு பேசியுள்ளார்.
அதில்,"டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நான் அடைந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் விஜய் சர்மா தான். அவர் என்னை தனது மகளைப் போன்று பார்த்துக் கொண்டார். கடந்த ஒலிம்பிக்கில் நான் தவறவிட்டதை இந்த ஒலிம்பிக்கில் அடைந்தே தீர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: Prithviraj Tondaiman: துப்பாக்கி சுடுதல்.. தங்கம் வெல்ல காத்திருக்கும் தங்கமகன் பிருத்விராஜ் தொண்டைமான்! யார் இவர்?
மேலும் படிக்க: Sharath Kamal: ஒலிம்பிக்கில் ஐந்தாவது முறையாக களம் இறங்கும் சரத் கமல்! யார் இவர்?