பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக். இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியவிற்கு தங்கம் வென்று கொடுக்க வாய்ப்புள்ள வீரர் தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:


லோவ்லினா போர்கோஹைன்:


கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் லோவ்லினா போர்கோஹைன்.


ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைபிரிவு ரத்து செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது 75 கிலோ எடை பிரிவுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ் உஸ்தி நாட் லேபெமில் 75 கிலோ எடைபிரிவில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் மற்றும், வெள்ளிப் பதக்கமும் வென்றார். இச்சூழலில் தான் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்த முறை இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


நிகத் ஜரீன்:



இரண்டு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 50 கிலோ பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட உள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான நிகத் ஜரீன் கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கானா தடகள வீராங்கனை 2022 இல் 52 கிலோ பிரிவில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை வென்றார், அதற்கு முன்பு அதே ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லைட்-ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார்.


2023 இல் 50 கிலோ பிரிவில் மற்றொரு உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை வென்று அசத்தினார். 2023 ஹாஞ்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.


2024 ஆம் ஆண்டு ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியலில் வெள்ளியையும், எலோர்டா கோப்பையில் தங்கப் பதக்கத்தையும் வென்று அதே உத்வேகத்துடன் தற்போது பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட உள்ளார்.இதனால் நிகத் ஜரீன் இந்த முறை தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.