பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக். இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்தியா சார்பில் 117 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதன்படி இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது பிரேக் டான்ஸ். பிரேக் டான்ஸ் என்றால் என்ன என்பது தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:


பிரேக் டான்ஸ் என்றால் என்ன?


பிரேக்கிங் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள சில ஆப்பிரிக்க அமெரிக்க சமூகங்கள் பொதுவாக பிரேக்டான்சிங், பி-பாய்யிங் மற்றும் பி-கேர்லிங் போன்ற பிற பெயர்களின் தோற்றத்துடன் தொடர்புடையவை.


இப்போது ஒரு விளையாட்டாக அறிமுகமாக உள்ளது, பிரேக்கிங் சாராம்சத்தில் ஒரு நடன வடிவமாக உள்ளது, இது உலகளவில் பரவலாக இடம் பெற்றுள்ள விளையாட்டாக உள்ளது. அதனால் தான் இந்த போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களின் ஒன்றான பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இடம் பெற்றது.




பொதுவாக பிரெஞ்சு நாட்டில் அதிகம் இந்த போட்டிகள் தெருக்களில் நிகழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. முதன் முதலில் பிரேக்டான்சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானது. அப்போது அதிகம் பார்வையாளர்களை கவர்ந்ததால் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!


மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோ