பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அந்தவகையில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும் உத்வேகத்துடன் களம் காண இருக்கிறது.


இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:


பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் ஆகியோரின் தலைமையில், இந்திய ஹாக்கி அணி 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒரு சிறந்த போட்டியாளராக உள்ளது.


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது, உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில்  பதக்கம் வென்று அசத்தியது. பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் இருந்த சூழலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அந்த வெண்கலப் பதக்கம் வென்ற அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய ஹாக்கி ஒலிம்பிக்கில் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கைப் புறக்கணித்தாலும், அதிக தங்கப்பதக்கங்களை வென்ற அணியாக ஹாக்கியில் இந்தியா திகழ்கிறது.இந்திய ஆடவர் ஹாக்கி அணி எட்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. உலகில் வேறு எந்த ஹாக்கி அணியும் இவ்வளவு தங்க பதக்கங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்திய ஆண்கள் ஹாக்கி அணி எவ்வாறு செயல்படுகிறது?


இந்திய ஹாக்கி அணி FIH ப்ரோ லீக்கில் ஏழாவது இடத்தைப் பிடித்தது மற்றும் 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையின் நாக் அவுட் நிலைகளுக்கு தகுதி பெற முடியவில்லை.  இது தவிர, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம் மற்றும் நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுடன் கடுமையாக மோதியது.


எவ்வாறாயினும், கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவிலான போட்டி பயிற்சி மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக சுவிட்சர்லாந்து மற்றும் SAI பெங்களூருவில் பயிற்சி முகாம்கள் நிகழ்வில் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக இந்திய அணி உருவாகியுள்ளது. இச்சூழலில் தான் இந்திய ஹாக்கி அணி இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.


 


மேலும் படிக்க: Prithviraj Tondaiman: துப்பாக்கி சுடுதல்.. தங்கம் வெல்ல காத்திருக்கும் தங்கமகன் பிருத்விராஜ் தொண்டைமான்! யார் இவர்?


மேலும் படிக்க: Sharath Kamal: ஒலிம்பிக்கில் ஐந்தாவது முறையாக களம் இறங்கும் சரத் கமல்! யார் இவர்?