பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 26 ஆம் தேதியான இன்று பிரமாண்டமாக தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக். இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் 117 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதன்படி இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள Sport climbing விளையாட்டு தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:


Sport climbing முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் 1940 களில் இருந்து, 1991 இல் நடந்த முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு 1980 களில் அறிமுகமானது. சர்வதேச விளையாட்டு க்ளைம்பிங் கூட்டமைப்பு (IFSC) இந்த விளையாட்டு பிரபலமடைந்து வருவதாகக் கூறுகிறது. உலகம் முழுவதும் 25 மில்லியன் மக்கள் தொடர்ந்து இந்த விளையாட்டை விரும்புகின்றனர். 


இது ஏன் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது?


கடந்த முறை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தான் இந்த விளையாட்டு முன்மொழியப்பட்டது. அதாவது அடுத்த ஒலிம்பிக்கில் எந்த போட்டிகள் இடம் பெறும் என்ற ஐந்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. டோக்கியோ 2020 இல் இடம்பெறும் மற்ற விளையாட்டுகள்: ஒலிம்பிக் பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் , ஒலிம்பிக் சர்ஃபிங் , ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் மற்றும் ஒலிம்பிக் கராத்தே இவையெல்லால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம் பெற்ற மற்ற விளையாட்டுகள். 


விதிகள் என்ன?


வேகம் ஏறுதல்:


இது 95 டிகிரி கோணத்தில் சாய்ந்த 15 மீட்டர் உயர சுவரில் இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டை. யார் முதலில் உச்சத்தை அடைகிறாரோ அவர் வெற்றியாளர் ஆவார், இது பொதுவாக ஏறக்குறைய ஆண்களுக்கு ஐந்து வினாடிகளும் பெண்களுக்கு ஏழு வினாடிகளும் ஆகும்.


போல்டரிங்:


நான்கு மீட்டர் உயர சுவரில் அமைக்கப்பட்டு, போட்டியாளர்கள் தங்களால் இயன்ற அளவு பாதைகளில் ஏறுவதற்கு நான்கு நிமிடங்கள் அவகாசம் அளிக்கிறார்கள், பாதையின் சிரமத்தின் அடிப்படையில் புள்ளிகளைப் பெறுவார்கள். பாதுகாப்பு கயிறு இல்லாமல் விளையாடுவதில் இதுவும் ஒன்று.


Lead climbing:


போட்டியாளர்கள் தங்களால் இயன்றவரை 15 மீட்டர் சுவரில் ஏறுவதற்கு ஆறு நிமிடங்கள் சகவாசம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற ஒரே ஒரு வாய்ப்பு தான். இதில் ஏறும் பொழுது கிழே விழுந்தால், அவர்கள் அடைந்த உச்ச உயரம் அவர்களின் மதிப்பெண்ணாக பதிவு செய்யப்படும். பெண்கள் போட்டியில் 20 பேர் மற்றும் ஆண்கள் பிரிவில் 20 பேர் என மொத்தம் 40 ஏறுபவர்கள் போட்டியிடுவார்கள். இந்த மூன்று நிகழ்வுகளின் முடிவில் அதிக மதிப்பெண்களை பெறுபவர்கள் சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!


மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோ