மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ்(64) சென்னை திருவன்மியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகள் சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் இருந்து வந்த தந்தை காமராஜ் தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
நடிகை சித்ரா தற்கொலை:
சீரியல் நடிகை, விளம்பரம், தொகுப்பாளர் என பல பரிணாமங்களில் சின்னத்திரையில் வலம் வந்தவர் விஜே சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2013ம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தமிழின் பல முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். இவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
சென்னை அருகே உள்ள நசரேத்பேட்டையில் படப்பிடிப்பிற்காக ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவுடன் அவரது காதல் கணவர் ஹேமந்த் குமாரும் தங்கியிருந்தார். ஹேமந்த்குமார் வௌியே சென்றுவிட்டு வந்து கதவை தட்டிப்பார்த்துள்ளார், ஆனால் கதவு உள்ளிருந்து தாழிட்டிருந்ததால், கதவை திறக்குமாறு சித்ராவை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் விடுதி ஊழியர் உதவியுடன் மாற்று சாவியை பயன்படுத்தி திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
ஹேமந்த் மீது குற்றச்சாட்டு:
சித்ராவின் தற்கொலையை முதலில் பார்த்தது ஹேமந்த் தான் என்றும் குளிக்க வேண்டும் என கூறி ஹேமந்தை வெளியே அனுப்பிய சித்ரா அறையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக ஹேமந்த் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் நடிகை சித்ராவின் உடலில் கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் ரத்த காயம் இருந்ததால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காமராஜ் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
மேலும் சித்ராவின் இறப்பில் வருங்கால மாப்பிள்ளையான ஹேமந்த் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது ஏற்கனவே சித்ராவுக்கும் தனக்கும் பதிவு திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்தார் ஹேமந்த், இந்நிலையில் திருமணமான 7 ஆண்டுகளுக்கும் பெண்ணுக்கு எந்த அசம்பாவிதம் நேர்ந்தாலும் கணவனே பொறுப்பு என்கிற பார்வையில் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு போனது.
ஹேமந்த் விடுதலை:
இதை வழக்காக போலீசார் பதிவு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சித்ராவும் ஹேமந்த்தும் ஏற்கனவே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. ஹேம்நாத் மீது சித்ரா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவரை காவல்துறை கைது செய்தது. பின்னர், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் இருந்து ஹேமந்த விடுதலை செய்யப்பட்டார்.
சித்ராவின் தந்தை தற்கொலை:
இந்த நிலையில் திருவான்மியூரில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் அவரது இல்லத்தில் மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.