உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நாளை காேலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் இன்று மாலை முதலே புத்தாண்டை கொண்டாடத் தயாராகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ம் தேதி வரும்போது அதை புத்தாண்டாக கொண்டாடும் நாம் ஏன் ஜனவரி 1ம் தேதி அதை கொண்டாடுகிறார்கள்? என்று சிந்தித்தது உண்டா?
உலகில் பெரும்பாலான பகுதிகளை ஒரு காலத்தில் ரோமானியர்களே ஆண்டனர். புத்தாண்டு கொண்டாட்டமானது பண்டைய ரோமானியர்களிடம் சிறப்பாகவே இருந்தது. அவர்கள் அப்போது மார்ச் மாத இடையில் வரும் ஒரு நாளையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மெசபோடோமியாவில் அப்படி ஒரு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 1ம் தேதி கொண்டாட்டம் ஏன்?
ரோமப் பேரரசிலே தவிர்க்க முடியாத அரசர் ஜுலியஸ் சீசர். அவர்தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். உலகிற்கு கிரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தியது அவரே ஆவார். ஜுலியஸ் சீசரே ஜனவரி 1ம் தேதி முதல் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
ரோமானியர்களின் பழக்கவழக்கங்களில் பல கடவுள்களை வணங்கும் வழக்கம் இருந்தது. அதன்படி, கடவுள் ஜானஸை போற்றும் விதமாக ஜனவரி 1ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. கடவுள் ஜானஸ் ரோமானியர்களின் நம்பிக்கைப்படி புதிய தொடக்கத்தின் கடவுள் ஆவார். அதன் காரணமாகவே, ஆண்டின் தொடக்கம் ஜனவரியில் இருந்து தொடங்குவதாக சீசர் அறிவித்தார்.
ரோமானியர்கள் ஆட்சி:
மேலும் சீசர் அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டரில் லீஃப் வருட முறையும் இருந்தது. கடவுள் ஜானஸ் தொடக்கம் மட்டுமின்றி முடிவு, மாற்றம், கடந்த காலத்தின் பிரதிபலிப்பு, எதிர்காலத்தின் மாற்றமாகவும் ரோமானியர்களால் வணங்கப்படுகிறார்.
ஜுலியஸ் சீசர் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தபோது, ரோமானியர்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய் கொண்டிருந்த காரணத்தால் மக்களும் இதை கடைப்பிடிக்கத் தொடங்கினர். மேலைநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் மற்றும் தொழில்வளர்ச்சி உலகம் முழுவதும் பரவியதால் அவர்களின் பழக்கங்களும் உலகம் முழுவதும் பரவியது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் உள்ளே வருவதற்கு முன்பு வரை தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒவ்வொரு நாள் புத்தாண்டு தொடக்கமாக இருந்தது. தற்போதும் அந்த புத்தாண்டையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் உலக நாடுகள் பெரும்பாலும் கொண்டாடும் ஜனவரி 1ம் தேதியையே இந்தியாவில் கோலாகலமாக புத்தாண்டாக காெண்டாடுகின்றனர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அவர்களது புத்தாண்டையே பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர்.