சென்னையில் நடைபெற்ற 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான அபய் சிங்கை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.


கடினமான போட்டி:


இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று விளையாடியது மிகவும் கடினமான போட்டி. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபய் சிங் நன்றாக விளையாடி வருகிறார். போட்டி முடியும் வரை மிகவும் நெறுக்கடியாகத்தான் இருந்தது. வெற்றி பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியாதாகத்தான் இன்றைக்கு இருந்தது. நான் வெற்று பெறுவதையோ, தோல்வி அடைவதையோ பற்றி கவலை படவில்லை. ஆனால், ஒவ்வொரு புள்ளிகளிலும் கவனமாக விளையாடினேன்.


ஸ்குவாஷ் போட்டிகளை தமிழ்நாட்டியில் நிறைய பேர் விளையாடி வருகின்றனர். ஸ்குவாஷ் ஒரு சிறந்த விளையாட்டு என்பதால் அதை இன்னும் நிறைய பேர் விளையாடுவார்கள்.


ஸ்குவாஷ் போட்டிகள் விளையாடுவதற்கான எல்லா சூழலும் தமிழகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக நிறைய வீரர்கள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விளையாடலாம்” என்று கூறினார்


தமிழ்நாடு அரசிற்கு நன்றி:


தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசு இந்த போட்டியை சிறப்பாக நடத்தியது. அதற்காக நான் தமிழ்நாடு அரசிற்கு தற்போது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தாக வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நியூசிலாந்து நாட்டுக்கு விளையாடச் செல்கிறேன். வரும் போட்டிகளில் விளையாடுவதற்கு உடற்பயிற்சி மற்றும் பிட்னஷ் மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க:Rohit - Virat Kohli: ”அடுத்த டி20 உலகக்கோப்பையிலும் ரோகித், விராட் கோலி ஆட வேண்டும்” - கெளதம் கம்பீர் ஆசை


 


மேலும் படிக்க: KL Rahul: உலகக் கோப்பை தோல்வி; "இன்னும் வலிக்கிறது...” - இதயம் நொறுங்கிய கே.எல்.ராகுல்!