கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் தென்னிந்திய அளவிலான மாபெரும் விளையாட்டுப் போட்டியை கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா யோக மையம் நடத்தி வருகிறது. இதன் முதல்கட்டமாக வாலிபால் பிரிவில் மாவட்ட அளவிலான போட்டி  மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. 




இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய அனைத்து தாலுகா பகுதிகளில் இருந்தும் 22 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் பந்து வீசி போட்டிகளை தொடக்கி வைத்தார். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே தலா ரூபாய் 9 ஆயிரம்,  ரூபாய் 6 ஆயிரம், ரூபாய் 3 ஆயிரம், ரூபாய் 2 ஆயிரம் ஆகிய ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 


7 years of Dharmadurai: ஆண்டிப்பட்டி கனவா காத்து வீசிய நாள்... சீனு ராமசாமியின் ஃபீல் குட் படம்.. 'தர்மதுரை' ரிலீசாகி 7 வருஷமாச்சு!




மேலும், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய நிர்வாகிகள் பாலு, சபேசன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


Dutee Chand: அதிர்ச்சி.. இந்தியாவின் வேகமான பெண் டூட்டி சந்துக்கு, 4 ஆண்டுகள் தடை.. ஊக்கமருந்து சோதனையில் மீண்டும் தோல்வி