ஆடி நிறுவனத்தின் இரண்டு புதிய மின்சார வாகனங்களான Q-8 e-Tron மற்றும் Q-8 Sportback e-Tron மாடல்கள், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


ஆடி நிறுவன மின்சார கார்:


சொகுசு கார்களுக்கு பெயர் போன ஆடி நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில், 3 மின்சார வாகனங்களை விற்பனை  செய்து வருகிறது. அதில், ஆடி ஆர்எஸ் இ-டிரான் ஜிடி கார் அதிகபட்சமாக ரூ.1.94 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-டிரான் மாடலிலேயே புதியதாக இரண்டு புதிய மின்சார கார்களை ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல்களுக்கு  Q8 இ-டிரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ டிரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


பல்வேறு ஆப்ஷன்கள்:


புதிய கார்கள் இத்துடன் ஒன்பது வித்தியாசமான வெளிப்புற நிறங்கள், மூன்று இன்டீரியர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. அதன்படி மெடைரா பிரவுன், க்ரோனோஸ் கிரே, கிளேசியர் வைட், மிதோஸ் பிளாக், பிளாஸ்மா புளூ, சொனெரியா ரெட், மேக்னெட் கிரே, ஸ்லாம் பெய்க் மற்றும் மேன்ஹேட்டன் கிரே நிறங்களிலும், இன்டீரியரை பொருத்தவரை ஒகாபி பிரவுன், பியல் பெய்க் மற்றும் பிளாக் நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன. 


விலை விவரம்:


Q8 இ-டிரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ டிரான் மாடல்களுக்கான முன்பதிவை, ஆடி நிறுவனம் கடந்த வாரமே தொடங்கிவிட்டது. இவற்றிற்கான முன்பதிவு கட்டணமாக ஐந்து லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புதிய ஆடி Q8 இ டிரான் சீரிஸின் தொடக விலை ரூ. 1 கோடியே 14 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட்பேக் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கின்றன.



  • ஆடி Q8 50 இ டிரான் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம்

  • ஆடி Q8 50 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம்

  • ஆடி Q8 55 இ டிரான் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரம்

  • ஆடி Q8 55 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம்


பேட்டரி விவரங்கள்:


ஆடி Q8 இ டிரான் மாடல் 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை முறையே 340 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 408 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இதோடு,  170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது, காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 31 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது.  இந்த எஸ்யுவி மாடலானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5.6 விநாடிகளில் எட்டிவிடும். இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதர விவரங்கள்:


ஆடியின் புதிய கார் மாடல்களில் வெளிப்புற புதுப்பிப்புகள் மிகக் குறைவாக இருந்தாலும், வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. Q8 e-tron ஆடியின் புதிய 2D லோகோவையும் பெற்றுள்ளது. அதேநேரம்,  உட்புறம் பெரும்பாலும் மாறாமல் உள்ளது, அதாவது சென்டர் கன்சோலில் இரண்டு-டச்ஸ்கிரீன் அமைப்புடன் தொடர்கிறது.  இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பிற்கான 10.1-இன்ச் திரை மற்றும் HVAC கட்டுப்பாடுகளுக்கான 8.6-இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளது. 16-ஸ்பீக்கர்,  ஓலுஃப்சென் ஸ்பீக்கர் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு மற்றும் 360 டிகிரி கேமராவுடன் கூடிய அனைத்து-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இடம்பெற்றுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI