ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கம் வென்றுள்ளார். 


தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான தடை தாண்டும் இறுதிப்போட்டியில் 100 மீட்டர்  பிரிவில் பந்தைய தூரத்தை 13.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.


ஜப்பான் வீராங்கனை டெராட அசூகா (13.13 விநாடிகள்) ஆகி மசுமி (13.26 வினாடிகள்) இருவரும் இரண்டாம் மூன்றாடம் இடத்தை பிடித்தனர்.


யார்ராஜியின் தேசிய அளவிலான அதிகபட்ச சாதனை பந்தய இலக்கை 12.82 நொடிகளில் கடந்திருந்தார்.புதன்கிழமை. ஆடவர் பிரிவில் பத்தாயிரம் மீட்டர் தூரம் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் கணக்கை தொடங்கியிருந்தார். 


யார் இந்த கோதி யார்ராஜி?


ஆந்திரபிரதேச மாநிலத்தின் விசாப்பட்டினம் பகுதியில் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட்,28 -ல் பிறந்தவர். இவர் தந்தை இரவு நிறுவனங்களின் பாதுகாவலராகவும், தாய் குமாரி நகர்புற மருத்துவமனையில் பகுதிநேர உதவியாளராக பணியாற்றிவர். சாதாரண குடும்பத்தில் இருந்து மிளர்ந்தவர் தனது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த்துள்ளார்.  கோழிக்கோடு நகரில் நடைபெற்ற ஃபெடரேசன் கப் போட்டியில் ஜோதி யார்ராஜி 13.09 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து புதிய சாதனை படைத்திருந்தார். இருந்தாலும், அந்த சாதனை அதிகாரப்பூர்வாம அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில், ஓடும்போது,தேசிய சாதனைக்கு +2m/s வேகம் தேவை. ஆனால், அவர் +2.1m/s  காற்றின் வேகம் இருந்தது. இது குறித்து அவர் கூறுகையில்,” இந்தியாவில் கை துப்பாகிகள் பயன்படுத்தி போட்டியை தொடங்குவார்கள். ஆனால், ஐரோப்பாவில் எலக்ட்ரானிக் ஸ்டாட்டர் பயன்படுத்துவார்கள். இது பற்றிய அனுபவம் இல்லாததால்,போட்டி தொடங்கியதை நான் அறியவில்லை.” என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். 


மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்ஸில் பாருல் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சிறந்த சாதனை படைத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் , அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் தங்க பதக்கத்திற்கான போட்டியில் பந்தயத்தை 9 நிமிடங்கள் 29.51 வினாடிகளில் நிறைவு செய்தார்,. இது அவர் கடந்த ஆண்டு அவர் சாதித்த 9 நிமிடங்கள் 38.29 வினாடிகளில் தனது முந்தைய சிறந்த சாதனையை முறியடித்தார்.




மேலும் வாசிக்க..


Priyanka Gandhi : பாட்டியின் வழியில் பிரியங்கா காந்தி.. இந்திரா காந்தி தொகுதியில் போட்டியாம்.. அதிர்ச்சியில் கே.சி.ஆர்


உயிர் காற்று இலவசம் - கொள்ளிடத்தில் ஆச்சரியப்படுத்தும் தனியார் பள்ளி