இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் சுருண்டது.
இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும் எடுத்திருந்தனர். இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ரன் எடுக்க திணறி கொண்டிருந்தபோது இந்திய அணி வீரர் சுப்மன் கில் மைதானத்தின் நடுவே நடனமாடி கொண்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுப்மன் கில் நடனம்:
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸின் 64வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கடைசி ஜோடியான ரக்கிம் கார்ன்வால் மற்றும் ஜோமன் வர்ரிக்கன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்லிப்பில் பீல்டிங் கொண்டிருந்த சுப்மன் கில் 64வது ஓவரின் முடிவில் நடனமாடினார்.
வைரலான கேட்ச்சுகள்:
ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் பிளகுவாட்டின் அடித்த பந்தை முகமது சிராஜ் கேட்ச் எடுத்தார். அதேபோல், ஷர்துல் தாக்கூரின் பந்தில் ரீஃபரின் சிறந்த கேட்சை இஷான் கிஷன் கைப்பற்றினார். தற்போது இந்த இரண்டு கேட்சுகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
டொமினிகா டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் சுருண்டது. அதே சமயம் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.