இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி. இவர் கடந்த 2022ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால், அதன்பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது. அப்போது, பி.சி.சி.ஐ.யின் தலைவராக சவ்ரவ் கங்குலி இருந்தார்.


விராட் - கங்குலி மோதல்:


விராட்கோலி கேப்டன்சி குறித்து அவரும், பி.சி.சி.ஐ. நிர்வாகிகளும் அடுத்தடுத்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விராட்கோலி – கங்குலி இடையே மோதல் இருப்பதும் சேத்தன்சர்மா ஸ்டீங் ஆபரேஷனில் தெரியவந்தது. இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணியும், கங்குலி இயக்குனராக உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின.


இந்த போட்டி முடிந்த பிறகு விராட்கோலிக்கு கங்குலி கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கங்குலியின் அந்த செயலுக்கும் கடும் கண்டனங்கள் குவிந்தது. அந்த போட்டியில் விராட்கோலி அரைசதம் அடித்தும், ஃபீல்டிங்கில் அசத்தியதும் விராட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.


இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ:


அந்த சம்பவத்தின் பரபரப்பு இணையத்தில் அடங்குவதற்குள் விராட்கோலி மற்றொரு சம்பவத்தை செய்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சவ்ரவ் கங்குலியை பின்தொடர்ந்து வந்ததை விராட்கோலி நீக்கிவிட்டார். தற்போது, இந்த சம்பவம் ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சவ்ரவ் கங்குலி தற்போது வரை விராட்கோலியை தனது இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்.


விராட்கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை குவித்து வந்தார். ஆனால், ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு விராட்கோலி 2 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்தது பல விமர்சனங்களை உண்டாக்கியது. அவரது தலைமையில் ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடரை இந்திய அணி பல முறை வென்றாலும், அவரது தலைமையில் தனிப்பட்ட சாம்பியன் தொடரை இந்திய அணி வெல்லாததும் அவருக்கு பின்னடைவையும், பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.


இந்த சூழலில், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கம்பேக் அளித்த விராட்கோலி ஒருநாள், டி20, டெஸ்ட் என்று தன்மேல் இருந்த அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி தந்தார். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் 4 போட்டிகளில் களமிறங்கி 3 அரைசதம் விளாசியுள்ளார்.


மேலும் படிக்க: Ganguly Wish Arjun: 'சாம்பியன் தந்தை நிச்சயம் பெருமைப்படுவார்' - நண்பன் சச்சினின் மகனுக்கு வாழ்த்து சொன்ன கங்குலி...!


மேலும் படிக்க: Watch Video: ”இதுக்காடா 3 பேர் அடிச்சுக்கிட்டிங்க”.. ஒத்தையிலே போல்ட் செய்த சம்பவம்