MI vs PBKS Live Score :மும்பை அணிக்கு 5வது தோல்வி..! பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி..!
IPL MI vs PBKS : மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை அணியின் நம்பிக்கையான சூர்யகுமார் யாதவ் ரபாடா வீசிய புல்டாஸ் பந்தில் ஓடீன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 30 பந்தில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் டேஞ்சர் பேட்ஸ்மேனாகிய பொல்லார்ட் இரண்டாவது ரன் ஓட முயன்றபோது தேவையில்லாத ரன் அவுட்டானார். அவர் 10 ரன்களில் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 29 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் சூர்யகுமார் யாதவும், பொல்லார்டும் உள்ளனர்.
மும்பை அணிக்காக அதிரடியாக ஆடிய திலக் வர்மா ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட்டானார். அவர் 20 பந்தில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை அணிக்காக ஒரே ஓவரில் 4 சிக்ஸர் அடித்த டேவல்ட் ப்ரெவிஸ் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஓடீன் ஸ்மித் பந்தில் அவுட்டானார்.
மும்பை வீரர்கள் டேவல்ட் ப்ரெவிஸ் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்துள்ளது.
மும்பை வீரர் டேவல்ட் ப்ரெவிஸ் ராகுல் சஹார் வீசிய பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.
மும்பை அணியின் முக்கிய வீரரான தொடக்க ஆட்டக்காரர் இஷான்கிஷான் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் வைபவ் அரோரா பந்தில் அவுட்டானார்.
199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர். 4 ஓவர்களில் மும்பை 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்துள்ளது. இதனால், மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் லிவிங்ஸ்டன் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா எடுத்துள்ளார்.
14 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெர்ஸ்டோவ் விக்கெட்டை மும்பை அணியின் ஜெயதேவ் உனட்கட் வீழ்த்தியுள்ளார். பெர்ஸ்டோவ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இவர் 37 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளின் உதவியுடன் அரைசதம் கடந்தார்.
13 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் முருகன் அஷ்வின் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்கள் எடுத்த நிலையில் முருகன் அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் அரைசதத்தை மயங்க் அகர்வால் விளாசியுள்ளார். அவர் 30 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் இந்த ரன்னை எட்டினார்.
பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை விளாசியுள்ளனர். மயங்க் அகர்வால் 21 பந்தில் 38 ரன்களுடனும், ஷிகர்தவான் 15 பந்தில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை வீரர் முருகன் அஸ்வின் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் அசத்தியுள்ளார்.
பஞ்சாப் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 9 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் அணிக்காக பேட்டிங்கைத் தொடங்கிய மயங்க் அகர்வால் முதல் பந்தையே பவுண்டரியுடன் தொடங்கினார். முதல் ஓவரில் மட்டும் மயங்க் அகர்வாலின் இரு பவுண்டரியுடன் பஞ்சாப் அணி 10 ரன்களை எடுத்துள்ளது.
Background
ஐ.பி.எல். தொடரின் 23வது ஆட்டமான இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -