Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே .உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 02 Dec 2024 01:18 PM
கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்பீர்களா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஜாமின் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்பீர்களா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் ஒரே நாளில் 24 செ.மீட்டர் மழைப்பொழிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரே நாளில் 24 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  

Background


  • விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத புதுச்சேரி, விழுப்புரம்

  • கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை – மற்ற கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்

  • கனமழை எதிரொலி; சென்னை, பெரியார் பல்கலைக்கழங்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு

  • விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

  • ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  • லண்டனில் படிப்பை முடித்து சென்னை திரும்பினார் அண்ணாமலை

  • கனமழையால் 50 செ.மீட்டர் மழை அளவு கொட்டித் தீர்த்த விழுப்புரத்திற்கு இன்று நேரில் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி

  • திருவண்ணாமலையில் கனமழையால் பாறை உருண்டு கீழே விழுந்தது – 7 பேரின் கதி என்ன?

  • திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணை நிரம்பியது – கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

  • சேலம் மாவட்டம் கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் – ஏற்காடு வர வேண்டாம் என எச்சரிக்கை

  • கனமழை எதிரொலி; பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வேலூரில் வெள்ள அபாயம்

  • திருவாரூரில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை – ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய சோகம்

  • கனமழை காரணமாக ஊட்டியில் இன்றும், நாளையும் மலை ரயில் ரத்து

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.