KKR vs RR, IPL 2023 LIVE: சொதப்பல் பந்து வீச்சு கொல்கத்தா.. மிரட்டல் பேட்டிங்கில் ராஜஸ்தான் வெற்றி..!
IPL 2023, Match 56, KKR vs RR: கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது.
8.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியுள்ளது.
அதிரடியாக ஆடிவரும் ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 13 பந்தில் தனது அரைசதத்தினை அதிவேகமாக எட்டியுள்ளார்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்புடன் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷர்துல் தாகுர் ஒரு ரன் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை சஹல் பந்து வீச்சில் இழந்தார்.
அரைசதம் கடந்து அதிரடிக்கு கியரை மாற்றிய வெங்கடேஷ் ஐயர் சஹல் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வரும் வெங்கடேஷ் ஐயர் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
அதிரடி மன்னன் ரஸல் தனது விக்கெட்டை இழந்த 14வது ஓவஎரின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடி மன்னன் ரஸல் 10 ரன்களில் இருந்த போது ஆசிஃப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது.
சஹல் வீசிய 13வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரி விளாசினார்.
ரஸல் களமிறங்கிய பின்னரும் கொல்கத்தா அணி நிதான ஆட்டத்தினையே காட்டி வருகிறது. 12 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
ராணாவின் விக்கெட்டிற்கு பிறகு கொல்கத்தா அணி சார்பில் ரஸல் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 11வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராணா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்த ஓவரை சஹல் வீசி வருகிறார்.
தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அதன் பின்னர் விக்கெட்டுகளை விடாமல் ஆடி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 76 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எட்டியுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் போட்டியின் 7வது ஓவரை ஜோ ரூட் வீசினார். இது தான் ஐபிஎல் தொடரில் அவர் வீசும் முதல் ஓவர்.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் போல்ட் பந்து வீச்சில் தொடக்க வீரர்களான ஜோசன் ராய் மற்றும் குர்பாஸ் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
இந்த ஐபிஎல் சீசன் இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடிக்கும் வகையில், ஒவ்வொரு போட்டியும் அனைத்து அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. இந்த சீசனின் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தற்போது தலா 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும்.
இந்த சீசனின் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று வலுவான அணியாக களமிறங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த 6 போட்டிகளில் 5ல் தோல்வியை சந்தித்துள்ளது.
நேருக்குநேர்:
ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 26 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இரு அணிகள் மோதும் இந்த முக்கியமான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை நடந்த 83 ஐபிஎல் போட்டிகளில், இலக்கை விரட்டிய அணி 49 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 34 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் முழுவிவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜேசன் ராய், அனுக் ராய், ஜவுக் ராய், , லாக்கி பெர்குசன், குல்வந்த் கெஜ்ரோலியா, டிம் சவுதி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், ஜான்சன் சார்லஸ், டேவிட் வைஸ், ஆர்யா தேசாய்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், துருவ் ஹெட்ரெல், துருவ் ஜூட்ரெல் , முருகன் அஷ்வின், சந்தீப் ஷர்மா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், தேவ்தத் படிக்கல், ஆடம் ஜம்பா, ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ஓபேட் மெக்காய், டிரென்ட் போல்ட், நவ்தீப் சைனி, ஆகாஷ் வசிஷ்ட், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப், குல்தீப் சென், டோனாவோன், அப்துல்லா ஃபெர்ரே பாசித், குணால் சிங் ரத்தோர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -