Breaking News LIVE: 100 கருணாநிதி வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

Breaking News LIVE 15th Dec 2024: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 15 Dec 2024 12:10 PM
100 கருணாநிதி வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

100 கருணாநிதி வந்தாலும் அ.தி.மு..கவை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நேற்று காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் இல்லை

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Background


  • வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார் – முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

  • உடல்நலக்குறைவால் காலமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்

  • தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மழைநீர் வெள்ளம்போல ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி

  • தொடர்ந்து பெய்த மழை காரணமாக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மழைநீரில் தத்தளிக்கிறது

  • தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழை காரணமாக மழைநீர் வெள்ளம்போல ஓடுவதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளனர்

  • டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை; மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கிய விளைநிலங்கள்

  • தொடர் கனமழை காரணமாக திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கரைக்குத் திரும்பாத மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • தென்மாநிலங்களில் கனமழை; வட மாநிலங்களில் கடும் குளிர்

  • தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்ட்ரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்

  • தூத்துக்குடியில் சிறுவன் கொலை; ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தது போலீஸ்

  • அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி புதியதாக எதையும் பேசவில்லை – பிரியங்கா காந்தி

  • சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவது தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் ஓவைசி ஆதங்கம்

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் லாரியில் கஞ்சா கடத்தல்; மடக்கிப் பிடித்த போலீஸ்

  • பிரஸ்பேனில் நேற்று மழையால் ஆட்டம் தடைபட்டதால் டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.