ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றிற்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.
வெளியான வீடியோ:
முன்னதாக கடந்த சில போட்டிகளின் போது ரோஹித் ஷர்மா தொடர்பான இரண்டு வீடியோக்கள் வெளியானது. அதாவது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா அந்த அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பேசிய உரையாடல் தொடர்பான வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
அந்த வீடியோவை கொல்கத்தா அணியும் தங்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டது. பிறகு ரசிகர்களின் கண்டனத்தை தொடர்ந்து அந்த வீடியோவை நீக்கியது கொல்கத்தா அணி. அந்த வீடியோவில் மும்பை அணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தி அபிஷேக் நாயருடன் ரோஹித் சர்மா விவாதித்தாக தெரிகிறது.
ரோகித் ஷர்மா ஆவேசம்:
இச்சூழலில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது ரோஹித் ஷர்மா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக்கூடியதாகிவிட்டது. இப்போது கேமராக்கள் பயிற்சியின் போது அல்லது போட்டி நாட்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனியுரிமையில் நாம் செய்யும் ஒவ்வொரு அடியையும் உரையாடலையும் பதிவு செய்கின்றன.
எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேட்டுக் கொண்டாலும், அது அப்போதும் ஒளிபரப்பப்பட்டது, இது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான உள்ளடக்கத்தைப் பெற வேண்டிய அவசியம் மற்றும் பார்வைகள் மற்றும் ஈடுபாட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது ஒரு நாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்." என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
மேலும் படிக்க: SRH vs PBKS Innings Highlights: பிரப்சிம்ரன் சிங் அதிரடி..ஹைதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!