ஐ.பி.எல் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 67 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.


கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகிறது. 


இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமசன் பணிக்காக நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் மும்பைக்கு சென்றுள்ளனர். அவ்வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவன அலுவலகத்துக்கு கமல்- ஷங்கர் கூட்டணி சென்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வர்ணனை செய்து வருகின்றனர்.


எங்கள் ஆதரவு சென்னைக்கே..


இதில் கமல்ஹாசன் பேசுகையில், “சரித்திரப்படி பார்த்தால் கிரிக்கெட்டே இங்கே தான் விளையாடி இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அதுக்காக மட்டும் இல்லை இதுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சியில் கூட நான் பேசிட்டிருந்தேன். சென்னைன்னு பெயர் வைத்த தலைமுறை நாங்கள். சென்னை எங்களுடையது என்ற ஒரு பெருமை எங்களுக்கு உண்டு. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எல்லாம் எப்படி ஒரு பெருமை இருக்குமோ அதே போல் சென்னை இது எங்கள் நகரம்.  


முதலில் அது மெட்ராஸ் என்ற பெயரில் இருந்தது. சென்னை என்ற பெயர் வழக்கத்திற்கு வருமா என்ன எல்லோரும் மெட்ராஸ் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே என்று யோசித்தபோது இன்றைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் வைத்திருக்கிறார். அதனால் கண்டிப்பாக எங்களுடைய சப்போர்ட் அவர்களுக்குத்தான் இருக்கும்” என்று கூறினார்.


கோலியும் கப் அடிக்கட்டும்:






தொடர்ந்து பேசிய அவர், “அதே நேரம் விராட்கோலி செய்த இத்தனை சாதனைகளுக்கும் அதற்கான பரிசுக்கோப்பை அவருக்கும் வேண்டும். அது அடுத்த கோப்பையாக இருக்கட்டும். ஆனால் இந்த கோப்பை எங்களுடையது” என்று கூறியுள்ளார்.


கமல்ஹாசன் பேசிய இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!


மேலும் படிக்க: CSK Vs RCB: டாஸ் வென்ற சென்னை..பந்து வீச்சு தேர்வு; அதிரடி பேட்டிங்கை தொடங்குமா RCB?