ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடக்கிறது. இதில் முதலில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி நேருக்கு நேர் மோதுகின்றன. ஹைதரபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியின் முடிவு பஞ்சாப் அணிக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர்கள் தொடரை விட்டு வெளியேறிவிட்டனர்.
முக்கிய வீரர்கள் இல்லாத பஞ்சாப்:
ஆனால், சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றால் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சறுக்கும். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2வது இடத்திற்கு முன்னேறும். இதனால், இந்த போட்டியின் முடிவு சன்ரைசர்ஸ் அணிக்கு முக்கியமானதாக அமையும்.
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட சாம் கரண், லிவிங்ஸ்டன், பார்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், என வெளிநாட்டு வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்காக தங்கள் நாட்டுக்கு சென்று விட்டனர். முக்கிய பந்துவீச்சாளர் ரபாடா காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இளம் பஞ்சாப் படை:
இதனால், இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி இளம் வீரர் ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் முக்கிய வீரர்களாக பிரப்சிம்ரன், அதர்வா டைடே, ஷஷாங்க், அசுதோஷ் சர்மா உள்ளனர். வெளிநாட்டு வீரராக ரூசோ மட்டுமே களமிறங்குகிறார். பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ரிஷி தவான், ஹர்ப்ரீத் ப்ரார் முக்கிய வீரர்களகாக உள்ளனர்.
சன்ரைசர்ஸ் அணி பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும்போது மிகவும் பலமான அணியாக உள்ளது. அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ராகுல் திரிபாதி, கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது பேட்டிங்கில் முக்கிய வீரர்களாக உள்ளனர். பாட் கம்மின்ஸ் ஆல் ரவுண்டராக உள்ளார். நடராஜன், விஜயகாந்த், புவனேஷ்குமார் முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
சன்ரைசர்ஸ் கலக்குமா?
தொடரை விட்டு வெளியேறிவிட்டதால் பஞ்சாப் அணி இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும். இதனால், எந்த கவலையுமின்றி அதிரடியாக பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் முழு பலத்துடன் ஆட ஹைதரபாத் அணி ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: RCB: நம்ப முடியாத கம்பேக்! "இறுதிவரை போராடுங்கள்" ஆர்.சி.பி. கற்றுத்தரும் பாடம் இதுதான்!
மேலும் படிக்க: Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!