ஐ.பி.எல் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் லீக் போட்டிகள் நடைபெறும் கடைசி நாளான, இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.


ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா தைடே மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார். இவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் திணறியது ஹைதராபாத் அணி. இவர்களது ஜோடி 91 ரன்களை வரை களத்தில் நின்றது. அப்போது அதிரடியாக விளையாடி வந்த அதர்வா தைடே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர் நடராஜன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங்:


மொத்தம் 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் குவித்தார்.  பின்னர் பிரப்சிம்ரன் சிங் உடன் ரிலீ ரோசோவ் இணைந்தார். இவர்களும் சிறப்பாகவே விளையாடினார்கள். இச்சூழலில் அதிரடியாக விளையாடி அரைசத்ததை பதிவு செய்தார் பிரப்சிம்ரன் சிங். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 71 ரன்களை குவித்தார். 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை குவித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி அந்த ஆட்டத்தை அதிரடியாக கொண்ட செல்லவில்லை.


215 ரன்கள் இலக்கு:


இதற்கு முந்தைய போட்டிகளில் அதிரடியாக விளையாடிய  ஷஷாங்க் சிங் 2 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே அரைசதம் விளாசுவார் என்று எதிர்பர்க்கப்பட ரிலீ ரோசோவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் வந்த ஜிதேஷ் ஷர்மா ஓரளவிற்கு நிதானமாக விளையாடினாலும் அடுத்த வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது.