மகா கும்ப மேளாவில் ஆர்சிபி அணி ரசிகர் ஒருவரின் பெங்களூரு அணியின் ஜெர்சியை தண்ணீரில் நனைத்து எடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மகா கும்பமேளா:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பகுதியில் ஆண்டுத்தோறும் கும்ப மேளா நிகழ்வு நடைப்பெறும். இந்த ஆண்டு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் மகா மேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் கலந்துக்கொண்டு புனித நீராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: IND Vs ENG 2nd T20: சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்படி? இந்தியா சாதிக்குமா? இதுவரை நடந்த போட்டிகளின் விவரங்கள்
ஆர்சிபி அணி ரசிகர்:
மகா கும்ப மேளாவில் ஆர்சிபி அணி ரசிகர் ஒருவரின் பெங்களூரு அணியின் ஜெர்சியை தண்ணீரில் நனைத்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ரசிகர்கள் ஆற்றில் இறங்கி தண்னீரில் மூன்று ஆர்சிபி அணி வெல்ல வேண்டும் என்று இந்த வேண்டுதலை செய்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த ரீல்ஸ்சில் "மஹா கும்பமேளா. RCB என்றென்றும்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவில், ரசிகர், திரிவேணி சங்கமத்தில் ஒரு சாதுவின் அருகில் நின்று, RCB ஜெர்சியை வைத்திருந்தார். மிகுந்த பயபக்தியுடன், அவர் ஜெர்சியை மூன்று முறை புனித நீரில் நனைத்து எடுத்தார்- இது அவரது அணிக்கு ஆசீர்வாதத்தைத் கொடுக்கும் என்கிற நம்பிக்கைக்குரிய செயலாகும். அவர் ஜெர்சியைப் பிடித்துக்கொண்டு ஆற்றின் கரைப்பகுதிக்கு வருவதுடன் திரும்பி நடப்பதுடன் கிளிப் முடிகிறது.
இதையும் படிங்க: Djokovic Shocks Crowd: பாதியில் வெளியேறிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்வெரேவ்... நடந்தது என்ன.?
ஆனால் அவரின் இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் தங்கள் ஆதரவையும் அவரின் இந்த செயல் முட்டாள் தனமானது என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.