PBKS vs LSG,IPL2022 Live: வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தல்... பஞ்சாபை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
PBKS vs LSG,IPL2022 Live: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!
பஞ்சாப் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்களின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை பஞ்சாப் வீரர் ரபாடா எடுத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் லக்னோ அணி 5 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டிக்கு லக்னோ அணியில் மணீஷ் பாண்டே இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மீண்டும் அணியில் அவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களே விளையாடுகின்றனர்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 3 போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 7-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் லக்னோ அணி 5 வெற்றியுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்புத் தொடரில் தற்போது வரை விளையாடியுள்ள போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி தன்னுடைய கடந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல் லக்னோ அணி தன்னுடைய கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்களில் வீழ்த்தியுள்ளது. இரண்டு அணிகளும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் அடைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -