மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். 


இந்த நிலையில், இந்த தொடரில் முதல் போட்டியில் ஆடும் டெல்லி அணி சார்பில் இன்று மட்டும் 7 வீரர்கள் டெல்லி அணிக்காக அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பல அணிகளும் தங்கள் அணிக்கு புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. சில அணிகள் தங்கள் அணியின் பழைய வீரர்களையே திரும்ப ஏலத்தில் எடுத்தது.


டெல்லி அணியில் ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட ரிஷப்பண்ட், அக்‌ஷர் படேல், பிரித்விஷா ஆகியோரைத் தவிர பெரும்பாலான வீரர்கள் புதிய வீரர்களாக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதனால், டெல்லி அணியில் 7 வீரர்கள் புதிய வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க : Laila: 16 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் கன்னக்குழி நடிகை லைலா! இன்ஸ்டாவில் சூசக போஸ்ட்.!


டெல்லி அணி சார்பில் டிம் செய்பெரட், ரோவ்மேன் பாவெல், ஷர்துல் தாக்கூர்ல கலீல் அகமது, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் மன்தீப்சிங் ஆகிய 7 பேர் டெல்லி அணிக்காக இன்று களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே டெல்லி அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, ரிஷப்பண்ட் அக்‌ஷர் படேல் மற்றும் லலித் யாதவ் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு போட்டிக்கு முன்னதாக தொப்பி கொடுத்து வரவேற்கப்பட்டது.




மேலும், கடந்த சீசன்களில் எல்லாம் அதிகபட்ச எண்ணிக்கையான 4 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கிய டெல்லி அணி இந்த போட்டியில் நியூசிலாந்தைச் சேர்ந்த டிம் செய்பெர்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ரோவ்மேன் பாவெல் ஆகியோர் என இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியுள்ளது,


சென்னைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Dhoni Fans Celebrations : அதே வேகம்.! "தல" எப்போதுமே "தல" தான்..! டுவிட்டரை அதகளப்படுத்தும் தோனி ஃபேன்ஸ்...!

மேலும் படிக்க : IND vs SA Womens: கனவு தகர்ந்தது.. அரையிறுதி வாய்ப்பு பறிபோனது! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண