நடிகை லைலா ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், கார்த்திக்கின் ‘ரோஜாவனம்’ அஜித்தின் ‘தீனா’ ‘பரமசிவன்’, சூர்யாவுடன் ‘நந்தா’ ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’, ‘மெளனம் பேசியதே’ விக்ரமின் ‘தில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதனைத்தொடர்ந்து ஈரானிய தொழிலதிபர் மெஹ்தினை திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இறுதியாக அஜித்தின் திருப்பதி படத்தில் நடித்த அவர், அதனைத்தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார். இது தொடர்பாக ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் போட்டோவை வைத்து பார்க்கும் போது, கார்த்தி ராஷிகண்ணா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது.
பிரபல நடிகையான லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.