கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் போட்டியில் மிகவும் சொதப்பலாக ஆடி வந்த சென்னை அணியை ஆபத்பாந்தவானாக தோனி காப்பாற்றினார். மிகவும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய தோனி, கடைசி கட்டத்தில் மிகவும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் 131 ரன்களை குவித்தது.
தோனி அரைசதம் அடித்ததை அடுத்து சமூக வலைதளங்களில் தோனியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்களும், சென்னை ரசிகர்களும் அவரது அரைசதத்தை கொண்டாடி வருகின்றனர்.