MI vs SRH LIVE Score: இமாலய இலக்கை வெறியோடு துரத்திய மும்பை; 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
IPL 2024MI vs SRH LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் லீக் போட்டி தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
277 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
16.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்தது.
15 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா தனது விக்கெட்டினை 34 பந்தில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் 15வது ஓவரின் முதல் பந்தில் பேட் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நமன் தீர் தனது விக்கெட்டினை 14 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில் உனத்கட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
24 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 51 ரன்கள் குவித்து திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 10வது ஓவரில் திலக்வர்மா மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.
ஒன்பது ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 12 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
4வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ஹைதராபாத் அணியின் ப்ளேயர் சமத் வீணடித்துள்ளார். 4 ஓவரில் மும்பை 59 ரன்கள் குவித்துள்ளது.
அதிரடியாக ஆடி வந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 13 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்துள்ளார்.
3 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 27 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது.
ரோகித் சர்மா போட்டியின் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸரை விளாசியுள்ளார்.
முதல் ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்து நிதானமாக தனது ஆட்டத்தினை தொடங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 278 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டினை இழந்து 232 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணி 14.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியுள்ளது.
13 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 3 விக்கெட்டினை இழந்து 180 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 23 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.
10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேக அரைசதம் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா.
ஆதிரடியாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை 24 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை விளாசியுள்ளார்.
ஹைதராபாத் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த சீசனில் ஹைதராபாத் அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஹைதராபாத் அணி 81 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளது.
6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 9 பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 52 ரன்கள் குவித்து இந்த சீசனின் அதிவேக அரைசதத்தினை பதிவு செய்துள்ளார்.
போட்டியின் 5வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசியுள்ளார். இந்த ஓவரை மும்பை கேப்டன் ஹர்திக் வீசினார்.
5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலை ஹர்திக் பாண்டியா தான் வீசிய போட்டிய 5வது ஓவரில் அவுட் ஆக்கியுள்ளார். மயங்க் அகர்வால் 11 ரன்களுக்கு அவுட்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கினை கட்டுப்படுத்தியுள்ளார். இதனால் 4 ஓவர்கள் முடிவில் 45 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் போட்டியின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி மிரட்டி வருகின்றார்.
போட்டியின் மூன்றாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் இந்த போட்டியின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அகர்வால் மற்றும் ட்ராவிஸ் ஹெட் மாறி மாறி பவுண்டரிகளை விளாசி வருகின்றது.
முதல் ஓவரில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து நிதானமாக தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
மும்மை அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள மாஃபாகா இளம் வயது வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தென்னாப்பிரிகாவைச் சேர்ந்த இடது கை மிதவேகப்பந்து வீச்சாளரான இவருக்கு வயது 17 ஆண்டுகள் 354 நாட்கள் என்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்
இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா மும்பை அணிக்காக 200வது போட்டியில் களமிறங்குகின்றார். அவருக்கு சச்சின் தெண்டுல்கர் ஜெர்சி வழங்கி கௌரவித்தார்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் ஹைதராபாத் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
Background
ஐபிஎல் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், 17வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக நாளுக்கு நாள் போட்டிகள் ரசிகர்களுக்கு ஆர்வத்தினை அதிகரித்து வருகின்றது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் இந்த ஏழு போட்டிகளிலும், உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் அடிப்படிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியின் அருகில் சென்று வெற்றியை தவறவிட்டது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சேஸிங் செய்ய முயற்சி செய்து தோல்வியைத் தழுவியது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெளியூர் மைதானங்களில் விளையாடி தோல்வியைத் தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று தனது உள்ளூர் மைதானமான ராஜீவ்காந்தி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகின்றது. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கரங்களே உயர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் ஹைதராபாத் அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியலில் அந்த அணி குறைந்த பட்சம் 4வது இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
ராஜீவ்காந்தி மைதானம் வழக்கமாகவே பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இரு அணிகளும் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்புள்ளது. பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -