இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக சைபர் காவல் துறை எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உறவுகளும் நண்பர்களும் பிறருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை மொபைலில் அனுப்பி வருகின்றனர். இதிலுமே மோசடி நடைபெற்று வருவதாக, சைபர் காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூறி உள்ளதாவது:
மோசடி நடைபெறும் விதம்:
உங்களது வாட்ஸப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும். அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் அந்த apk file-ஐ ஓப்பன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களைத் தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.
அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்து வந்தால்..
எனவே வாட்ஸப்-ல் வரும் இது போன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் https://cybercrime.gov.in/ அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://cybercrime.gov.in/