MI vs LSG Score LIVE:அபார பந்துவீச்சு.. சொதப்பிய மும்பை.. 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 16 May 2023 11:35 PM
லக்னோ அபாரம்..

மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது

கடைசி 6 பந்துகள்..

மும்பை அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை

வெற்றி யாருக்கு..

மும்பை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை

மீண்டும் ஒரு விக்கெட்..

இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய வினோத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்

18 பந்துகள்..

மும்பை அணிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை

மீண்டும் ஒரு விக்கெட்..

16 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார் வதேரா

அதிரடி காட்டுமா மும்பை..

கடைசி 4 ஓவர்களில் மும்பை அணிக்கு 47 ரன்கள் தேவை

53 ரன்கள் தேவை..

மும்பை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் தேவை

சூர்யா அவுட்..

7 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்

36 பந்துகளில்..

மும்பை அணி வெற்றி பெற 36 பந்துகளில் 63 ரன்கள் தேவை

7 ஓவர்களே மிச்சம்..

13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 107 ரன்களை சேர்த்துள்ளது.

உடனடியாக சரிந்த ரன் வேட்டை..

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்ததை தொடர்ந்து மும்பை அணி நிதானமாக விளையாடி வருகிறது

அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது..

அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்

54 பந்துகள் மிச்சம்..

மும்பை அணி வெற்றி பெற 54 பந்துகளில் 75 ரன்கள் தேவை 

100 ரன்களை கடந்த மும்பை..

10.3 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது மும்பை

இஷான் கிஷன் அசத்தல்

34 பந்துகளில் அரைசதம் கடந்தார் இஷான் கிஷன்

100 ரன்களை நெருங்கும் மும்பை..

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களை சேர்த்துள்ளது


 


 

கேப்டனை இழந்த மும்பை

பொறுப்பாக விளையாடிய ரோகித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழந்தார்

9 ஓவர்கள் மிச்சம்..

9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 82 ரன்களை சேர்த்துள்ளது

104 ரன்கள் தேவை..

மும்பை அணி வெற்றி பெற 72 பந்துகளில் 104 ரன்கள் தேவை

அதிரடியாக ரன் குவிக்கும் இஷான்..

7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 69 ரன்களை குவித்துள்ளது

முடிந்தது பவர்பிளே..

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை சேர்த்துள்ளது.

ரோகித் - இஷான் அசத்தல்..

ரோகித் - இஷான் கூட்டனி 5.2 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்துள்ளது.

50 ரன்களை நெருங்கும் மும்பை..

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 47 ரன்களை சேர்த்துள்ளது

ஸ்டோய்னிஷ் அபாரம்..

47 பந்துகளில் 89 ரன்களை குவித்தார் ஸ்டோய்னிஷ்

178 ரன்கள் இலக்கு

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது

ஒரே ஓவர் தான் மிச்சம்..

19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 162 ரன்களை குவித்துள்ளது.

150-ஐ நெருங்கும் லக்னோ..

18 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது லக்னோ

வாரிக்கொடுத்த ஜோர்டன்...

18வது ஓவரை வீசிய ஜோர்டன் ஒரே ஓவரில் 24 ரன்களை கொடுத்தார்

அரைசதம் விளாசிய ஸ்டோய்னிஷ்

36 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஸ்டோய்னிஷ்

49 ரன்களை சேர்த்த க்ருணால்..

காயம் காரணமாக வெளியேறிய க்ருணால் பாண்ட்யா 42 பந்துகளில் 49 ரன்களை சேர்த்தார்.

வெளியேறினார் க்ருணால்..

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார் க்ருணால் பாண்ட்யா

16 ஓவர்கள் முடிந்தது..

16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 117 ரன்களை குவித்துள்ளது.

30 பந்துகளே மிச்சம்..

15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 108 ரன்களை சேர்த்துள்ளது

அரைசதத்தை நெருங்கும் க்ருணால்..

38 பந்துகளில் 46 ரன்களை சேர்த்துள்ளார் க்ருணால் பாண்ட்யா

100 ரன்களை எட்டிய லக்னோ

14 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியது லக்னோ அணி

100-ஐ நெருங்கும் லக்னோ..

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 95 ரன்களை சேர்த்துள்ளது 

50 ரன்களை சேர்த்த கூட்டணி..

க்ருணால் - ஸ்டோய்னிஷ் கூட்டணி 34 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது.

11 ஓவர்கள் காலி..

11 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 78 ரன்களை சேர்த்துள்ளது.

அதிரடி தொடங்குமா?..

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்களை சேர்த்துள்ளது.

9 ஓவர்கள் முடிந்தது..

9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 63 ரன்களை சேர்த்துள்ளது

50-ஐ எட்டிய லக்னோ..

8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 50 ரன்களை சேர்த்துள்ளது.

லக்னோவை காப்பாரா க்ருணால் பாண்ட்யா?..

16 பந்துகளில் 15 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறார் கேப்டன் க்ருணால் பாண்ட்யா

முக்கிய விக்கெட் காலி..

நட்சத்திர வீரர் டி-காக் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்

முடிந்தது பவர்பிளே...

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 35 ரன்களை சேர்த்துள்ளது.

ஒரு ஓவரே மிச்சம்..

பவர்பிளேயின் 5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 32 ரன்களை சேர்த்துள்ளது.

நெருக்கடி தரும் மும்பை..

4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 23 ரன்களை எடுத்துள்ளது

2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ..

3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 17 ரன்களை சேர்த்துள்ளது

டக் - அவுட்..

எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் இளம் வீரர் மன்கட்

பழிவாங்கிய டிம் டேவிட்..

பெஹ்ரண்ட்ரோஃப் ஓவரில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார் தீபக் ஹூடா

நிதான ஆட்டம்..

2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 12 ரன்களை எடுத்துள்ளது.

வாய்ப்பை விட்ட டிம் டேவிட்..

தீபக் ஹூடா கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் டிம் டேவிட்

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் லக்னோ அணி 3 ரன்களை சேர்த்துள்ளது

மும்பை இந்தியன்ஸ் அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் மத்வால், நேஹால் வதேரா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஹ்ரித்திக் ஷோகின்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


விஷ்னு வினோத், ரமன்தீப் சிங், ஸ்டப்ஸ், குமார் கார்த்திகேயா, ராகவ் கோயல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா (கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, நவீன் உல்-ஹக்,  ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மோஹ்சின் கான்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


யாஷ் தாக்கூர், கிருஷ்ணப்பா கவுதம், சாம்ஸ், யுத்விர் சிங், கைல் மேயர்ஸ்

லக்னோ பேட்டிங்..

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 62 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னணியில் இருந்த மற்ற அணிகள் கூட அடுத்தடுத்த தோல்விகளால் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


லக்னோ - மும்பை மோதல்:


லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியுற்றால், பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், இரு அணி ரசிகர்களுக்கும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


மும்பை அணி நிலவரம்:


ஆரம்பத்தில் வழக்கம்போல் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும், சுதாரித்துக்கொண்ட மும்பை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் நீடிக்கிறது. இன்றையை போட்டியில் வெற்றி பெற்றால், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வலுவான குஜராத் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன், மும்பை அணி இன்று களமிறங்குகிறது. எவ்வளவு பெரிய இலக்கை கொடுத்தாலும் துரத்தி அடிக்கும் அளவிற்கு மும்பை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அதேநேரம், பேட்ஸ்மேன்கள் எவ்வளவு பெரிய ஸ்கோரை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தாலும் அதை விட்டுக்கொடுக்கும் அளவிற்கு மோசமான பந்துவீச்சு இருப்பது தான் மும்பை அணியின் பலவீனமாக உள்ளது. ஐந்துமுறை சாம்பியனான மும்பை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றிற்கு கூட தகுதி பெறாத நிலையில், நடப்பு தொடரில் அந்த நிலையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லக்னோ அணி நிலவரம்:


லக்னோ அணி ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வந்தாலும், கடந்த சில போட்டிகளில் அந்த அணி வெற்றி, தோல்விகளை மாறி மாறி பெற்று வருகிறது. அந்த அணியின் கேப்டன் கே. எல். ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்றையை போட்டியில் வெற்றி பெற்றால், லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன், லக்னோ அணி இன்று களமிறங்குகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதே அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. இந்நிலையில், உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில், லக்னோ வீரர்கள் ஜொலிப்பார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


மைதானம் எப்படி?


ஏக்னா மைதானம் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. கடந்த 3 ஆண்டுகளில் அங்கு மொத்தமாக 30 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளில் 53% சுழற்பந்துவீச்சாளர்கள் தான் எடுத்துள்ளனர். கடைசியாக அங்கு விளையாடிய 5 லீக் போட்டிகளில் மூன்றில், முதலில் விளையாடிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.


நேருக்கு நேர்?


இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றது.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச அணி:


குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா (கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்


மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி :


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.