தெலுங்கானா மாநிலத்தில் ஹெய்னெகன் மற்றும் கிங்பிஷர் பீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீர் விற்பனை நிறுத்தம்:
தெலுங்கானாவில் பிரபலமான கிங்ஃபிஷர், கிங்பிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் போன்ற பிரபலமான பீர் பிராண்டுகளை யுனைடெட் ப்ரூவரீஸ் தயாரிக்கிறது.
யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் (யுபிஎல்) புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் இருக்கும் பொதுத் துறை நிறுவனமான டிஜிபிசிஎல், கடந்த கால பீர் சப்ளைகளில், நிலுவைத் தொகையை அதிக அளவில் வைத்துள்ளது.
மேலும் 2019-20 ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் பீரின் அடிப்படை விலையை மாற்றவும் இல்லை, இதன் விளைவாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ” TGBCL க்கு எங்களது பீர் பானங்களை தொடர்ந்து வழங்குவது சாத்தியமற்றது" என்று யுனைடெட் ப்ரூவரீஸ் தெரிவித்துள்ளது.
இதனால் தெலுங்கானாவில் ஹெய்னெகன் மற்றும் கிங்பிஷர் பீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி:
"ஒவ்வொரு பீரும் நஷ்டத்தில் விற்கப்படுவதால், எங்களது செயல்பாடுகளைத் தொடர்வது எங்களுக்குத் தாங்க முடியாததாகிவிட்டது," மேலும், TGBCL இலிருந்து தாமதமாக பணம் செலுத்துவது நிதி நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.
ப்ரூவர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (BAI) தொழில்துறையின் நிதிப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் பல பிரதிநிதித்துவங்களைச் செய்ததாகவும், பணவீக்கத்தை எதிர்த்துப் போராட விலைக் குறைப்புகளைக் கோரியதாகவும், ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
நிதி சவால்கள் இருந்தபோதிலும், நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் மாநிலத்தின் வருவாயில் 4,500 கோடி ரூபாய்க்கு மேல் பங்களிக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பீர் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய விரைவாக செயல்படுமாறு தெலுங்கானா அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தருணத்தில், கிங் பிசர் மற்றும் ஹெய்னெகன் ஆகிய பிராண்டுகளின் பிரியர்களாக இருக்கும் மதுப்பிரியர்களுக்கு, இந்த செய்தியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.