லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவை 99.95 லட்சம் ரூபாய்க்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.  இதன்மூலம் LPL வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


லங்கா ப்ரீமியர் லீக்:

இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் தொடர்களில் முக்கியமானது ஐ.பி.எல். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் லீக் 17 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைப்போலவே பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு வீரர்களிடம் திறமையை வளர்ப்பதற்காக தங்கள் நாட்டிலேயே இது போன்ற லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக்கும் இதில் அடங்கும். இச்சூழலில் தான் லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்றது.  


தோனியால் கூடிய மவுசு:


மதீஷா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இலங்கை அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் பந்து வீச்சில் ஜொலிக்கவில்லை என்றாலும் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அந்தவகையில், வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் 2024 இல் ஆறு போட்டிகளில் விளையாடி 7.68 எகனாமியில்  13 விக்கெட்டுகளை எடுத்தார். 


அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்:






ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீச திணறிய இவரை தோனி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அவருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். இதன் மூலம் சென்னை அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக மாறினார் மதீஷா பத்திரனா. இச்சூழலில் தான் மதீஷா பத்திரனவை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 99.95 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து இருக்கிறது. இதன்மூலம் LPL வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 






சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் இவ்வளவு விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டதற்கு தோனிதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜூன் மாதம் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணியில் மதீஷா பதிரனா இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!


மேலும் படிக்க: Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!